வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா ?எதுவுமே சாப்பிட முடியலயா? இந்த 8 வீட்டு வைத்தியங்கள் இருக்கே..!

வாய்ப்புண் வந்ததும் ஆரம்பத்திலேயே கவனித்து கீழ்வரும் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால் மிக வேகமாக அதை சரிசெய்து விட முடியும்.
வாய்ப்புண்ணை மிக வேகமாக ஆற்றும் ஆற்றல் தேனுக்கு உண்டு. தேனில் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்து இருக்கின்றன.இது உதடு மற்றும் வாய்ப்பகுதியை நன்கு மாய்ஸ்ச்சராகவே வைத்திருக்கும். வறட்சி ஏற்பட்டு தோலுரிதல் போன்றவற்றைத் தடுக்கும். அதனால் வாய்ப்புண் வேகமாக ஆறும்.
தேங்காய் எண்ணெயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதோடு பூஞசை எதிர்ப்பு பண்புகளும் ஆன்டி வைரல் பண்புகளும் நிறைந்திருககின்றன.அதனால் இது புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஹீலிங் செய்யும் பண்பு கொண்டது. வாய்ப்புண் உள்ள இடத்தை சுத்தம் செய்துவிட்டு, தேங்காய் எண்ணெயை சில துளிகள் எடுத்து அப்ளை செய்து வருவதால் வாய்ப்புண் வேகமாக ஆறும்.
வாய்ப்புண் உள்ள இடத்தில் விறுவிறுவென்று வலி இருந்து கொண்டே இருக்கும். அந்த வலியைக் குறைத்து இதமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க நீங்கள் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம.கற்றாழையில் ஹீலிங் பண்புகளும் ஆன்டி செப்டிக் பண்புகளும் அதிகம். இது புண்களை அதிகப்படுத்தாமல் விரைவில் ஆறுவதற்கு உதவி செய்யும்.உள்ளுக்குள்ளும் கற்றாழை ஜூஸை குடித்து வரலாம். வெளியிலும் புண் உள்ள இடத்திலும் அப்ளை செய்யலாம்.
ஏராளமான மருத்துவ குணங்கள் கொ்ண்ட ஒரு தாவரம் தான் துளசி. இதில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகம். அதனால் வாய்ப்புண்ணில் இருக்கும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் அசௌகரியத்தையும் இது குறைக்கும். இந்த துளசி இலைகளை சுத்தம் செய்து விட்டு, மென்று அதன் சாறு வாய்ப்புண் உள்ள படும்படி மென்று சாப்பிடுங்கள். துளசி சாறை புணணின் மேல் அப்ளையும் செய்யலாம்.
ஆப்பிள் சிடார் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொ்ணடது. புண்கள் உண்டாகக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் இந்த ஆப்பிள் சிடார் வினிகருக்கு உண்டு.வாய்ப்புண் உள்ளவர்கள் ஆப்பிள் சிடார் வினிகர் 2 ஸ்பூனை ஒரு கப் நீரில் கலந்து, அதில் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் விரைவில் ஆறும்.
பூண்டில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது வாய்ப்புண்ணால் ஏற்படும் வலியைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.பூண்டை சாறாக எடுத்தோ அல்லது தோலை நீக்கிவிட்டு வாய்ப்புண் உள்ள இடத்தில் தேய்த்து வர புண்கள் ஆறும. வாய்ப்பகுதியில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்றுக்களும் குணமாகும்.
ஆயுர்வேதத்தில் அதிமதுரம் மிக முக்கியமான ஒரு மூலிகையாகும். வயிறு மற்றும் ஒடடுமொத்த உடல் கழிவுகளையும் வெளியேற்றி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது.நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிறு அசௌகரியம் ஆகியவற்றை சரிசெய்யும். அதிமதுரம் பொடி கலந்த நீரில் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண்கள் வேகமாக ஆறும்.
வாய்ப்புண் ஏற்படுவதற்கு வைட்டமின் சி பற்றாக்குறையும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
வைட்டமின் சி பற்றாக்குறையையும் சரிசெய்து வாய்ப்புண்ணையும் ஆறு்ற வேணடுமானால் அதற்கு ஆரஞ்சு ஜூஸ் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். அதனால் வாய்ப்புண் ஆறும் வரை ஃப்ரஷ்ஷாக பிழிந்து எடுத்த ஆரஞ்சு ஜூஸை குடிக்கலாம்.