1. Home
  2. தமிழ்நாடு

கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் பார்க்க ரெடியா..? விரைவில் வெளியாகிறது சூழல் 2..!

Q

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவான  ‘சுழல்’ தொடர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இதில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ ரெட்டி, இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகிறது.
 'சுழல்' வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை கவுரி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சூழல் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like