ஊருக்கு போக ரெடியா ? இன்று முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்!
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்குச் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2 ஆயிரத்து 910 சிறப்பு பஸ்கள் இயக்கப் போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பஸ்களுடன் சென்னையிலிருந்து 700 பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பஸ்களில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் பஸ்கள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம்:
திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாகப் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகப் பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
கோயம்பேடு:
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாகத் திருப்பதி செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.
மாதவரம்:
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படுகிறது.
உதவி எண்கள்: 7845700557, 7845727920, 7845740924.
புகார் தெரிவிப்பதற்கான எண்கள்:
அரசுப் பேருந்துகள்: 94450 14436
ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 26280445, 26281611.