1. Home
  2. தமிழ்நாடு

ஸ்கூலுக்கு போக ரெடியா ? தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி வெளியானது!

1

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு , 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. ஏப்ரல் மற்றும் மே மாத முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது.

சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. 2024-25 ஆம் கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஜூன் மாதத்தை பொறுத்தவரை 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பகிர்ந்திருக்கிறார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வரும் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like