ஊட்டி போக ரெடியா மக்களே..? 127வது மலர் கண்காட்சி தேதி அறிவிப்பு..!

உதகை தாவரவியல் பூங்காவில் வரும் கோடை சீசன் மலர் கண்காட்சியை முன்னிட்டு நாற்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கி விறுவிறுப்பாக வேலைகள் நடந்து வருகிறது.
இதில், ஜெரேனியம், சைக்லோமன், பால்சம் உள்ளிட்ட 275 வகையான விதைகள், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட 7.5 லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 127வது மலர் கண்காட்சி மே 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்ய தண்ணீரு அறிவிப்பு!
மே 3ம் தேதி தொடங்கும் கோடை விழாவில் காய்கறி, வாசனை திரவியம், ரோஜா, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட கண்காட்சிகள் நடைபெறவுள்ளன