1. Home
  2. தமிழ்நாடு

கோவை இளைஞர்களே ரெடியா..? கோவை மாநகரில் மீண்டும் வேலைவாய்ப்பு முகாம்!

1

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலையறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் 250க்கும் மேற்பட்ட பங்கேற்க இருக்கின்றன. இவர்களிடம் உள்ள 15,000+ காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகாமில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ நர்சிங் பார்மசி பொறியியல் ப படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று வருகை தர வேண்டும்.

மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசமாக வழங்கப்படும்.

எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசிக்கு அழைத்து  தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 

தொலைபேசி - 0422-2642388 or 94990-55937.

Trending News

Latest News

You May Like