1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ரெடியா..? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு..!

Q

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் ஜனவரி 17- ஆம் தேதி அன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்; ஜனவரி 15- ஆம் தேதி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், ஜனவரி 16- ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடக்கும் அந்தந்த இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்டத் துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது சாதி பெயரை குறிப்பிடக் கூடாது; காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயர் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like