வேலை தேடுபவரா நீங்கள் ? ஆண்டுக்கு ரூ.7200 உதவித் தொகை: வேலையில்லாத இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த உதவித்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற 10ஆம் வகுபபு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுபப்பு, பட்டய படிப்பு மற்றும் பட்டபடிப்பு போன்ற கல்வித்தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும் அந்த வகையில் வருடத்திற்கு 2,400 ரூபாய் வழங்கப்படுகிறது.இதே போல 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் என வருடத்திற்கு 3,600 வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 4800 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வருடத்திற்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உதவி தொகை பயன் என்ன.?
இந்த திட்டத்தின் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு சுய விவரம் தயாரிப்புக்கும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அடிப்படையான மொபைல் போன் ரீசார்ஜ் உள்ளிட்ட தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உதவி திட்டம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்
இந்த உதவி தொகையானது 10 வது, 12 வது மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5வருடத்திற்கு பிறகும் வேலை கிடைக்காதவர்களுக்கு இந்த உதவி தொகை திட்டம் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை காலம்:
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பித்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினருக்கு 45 வயது வரை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. மேலும், உதவித்தொகை பெறும் காலத்தில் சரியாக புதுப்பித்து தர வேண்டும். பணி நியமன பெற்றவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உதவித்தொகை எவ்வளவு?
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ-300, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்விக்கு ரூ.600, கல்வித் தகுதிக்கு ரூ.750, பட்டப்படிப்புக்கு ரூ.1,000 என வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் உரிய விண்ணப்ப படிவத்தினை கிண்டியில் உள்ள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.