பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? எந்த தேதிக்கு எப்போ முன்பதிவு தெரியுமா ?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்கான முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு விவரம்:-
1) செப்டம்பர் 13-ம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
2) செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
3) செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
4) செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
5) செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
6) செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
7) செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.