1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கியாச்சு..!

1

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு கிளம்பிவிடுவார்கள்.கடைசி கட்டத்தில் ரயில்களிலும் பேருந்துகளிலும் இடம் கிடைக்காமல் பயணிகள் அல்லாடுவதையும் பார்க்க முடியும். பல பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்து விடுவார்கள்.

ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை ஆகும். தீபாவளிக்கு முந்தைய நாட்களில் மக்கள் வழக்கமாக சொந்த ஊர் செல்ல திட்டமிடுவார்கள்.

அதாவது, அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் பலரும் பிளன் செய்வார்கள். அந்த வகையில், அக்டோபர் 28 ஆம் தேதிக்கான ( திங்கள்) முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்தே டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன. வழக்கமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்க்களில் விற்று தீர்ந்து விட்டது.

அக்டோபர் 29 ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று புக்கிங் செய்து கொள்ளலாம். 30 -ம் தேதி பயணம் செய்ய விரும்புவர்கள் நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். 

Trending News

Latest News

You May Like