ஆயுத பூஜைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? உடனே முன்பதிவு செய்யுங்க..!

ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதியும் தற்போது நடைமுறையில் உள்ளது.இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது, அதற்கு மறுநாள் 12ஆம் தேதி விஜயதசமியும் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதினால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றது.
அதனால் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது, அக்டோபர் 9ம் தேதி புதன்கிழமை பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது, அக்டோபர் 10ம் தேதி செல்பவர்கள் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆயுத பூஜை நாளான அக்.11-ம் தேதி ஊருக்கு செல்வோர், நாளை 13-ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.