ஐபிஎல் பார்க்க போறீங்களா ? உங்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்..!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.
இந்நிலையில் இந்த சீசன் முழுவதும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள் தங்களின் ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்துகொள்ளலாம் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.
போட்டி 8 மணிக்குத் தொடங்கிக் கிட்டத்தட்ட 11 மணி வரை நடைபெற இருக்கும் நிலையில் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்திலிருந்து பிற இடங்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசமாகச் செல்லலாம் என்றும் குளிர் சாதனப் பேருந்துகளில் மட்டும் இந்தச் சலுகை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.