1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா ? அப்போ இந்த தேதியை குறிச்சு வெச்சுக்கோங்க..!

1

இந்தியாவில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகை தினத்தை முன்னிட்டு ஒரு சில மாதத்திற்கு முன்னதாகவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு தொடங்கப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தற்போதே முன்பதிவு தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி வரும் ஜூலை 12ஆம் தேதி துவங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் பண்டிகை தினத்தன்று ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டணம் இரட்டிப்பாக இருக்கும் நிலையில் பலரும் முன்பதிவு செய்ய விரும்புகின்றனர்.

இந்நிலையில், ஏகப்பட்ட பயணிகள் முன்பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே நிர்வாகம் ரயில் டிக்கெட்களை வெளியிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து விட வாய்ப்புள்ளதால் உடனடியாக ஜூலை 12ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வாயிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே பயண சீட்டை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி வருகிற 12ம் முதல் தொடங்குகிறது.

நவம்பர் 9ம் தேதி வெளியூர் செல்லும் நபர்கள் ஜூலை 12ஆம் தேதியும் , நவம்பர் 10ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ஆம் தேதியும்,  நவம்பர் 11ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 14ஆம் தேதியும் , நவம்பர் 12ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 15ஆம் தேதியும் ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like