1. Home
  2. தமிழ்நாடு

ஊருக்கு போறீங்களா..? தீபாவளிக்கு முன்பதிவு செய்ய இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க..!

1

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அக்டோபர் 16-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்றது.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. 

அக்டோபர் 17 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் இன்று (ஆகஸ்ட் 18)யும், அக்டோபர் 18 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை, நாளை ஆகஸ்ட் 19 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.அதேபோல,அக்டோபர் 19 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 20 ஆம் தேதியும் அக்டோபர் 20க்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.

Trending News

Latest News

You May Like