1. Home
  2. தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா.! தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய அறிவிப்பு

1

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூன் 10ம் தேதி செவ்வாய் கிழமை பெளர்ணமி தினம் அமைந்துள்ளது. அன்றைய தினம் பகல் 12.27 மணிக்கு துவங்கி, ஜூன் 11ம் தேதி பகல் 01.53 வரை பெளர்ணமி திதி உள்ளது.

கிரிவலம் செல்ல ஏற்ற நேரமாக ஜூன் 10ம் தேதி காலை 11.35 மணி முதல் ஜூலை 11ம் தேதி பகல் 01.30 மணி வரையிலான நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரவுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதே போல திருவண்ணாமலைக்கு செல்வதற்காக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற 10-ஆம் தேதி திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதையொட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத சிறப்புரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.25 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் மறு மார்க்கத்தில் மதியம்12:40 மணிக்கு புறப்படும் ரயிலானது மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், அயந்தூர், அடிச்சனூர், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like