1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி போறீங்களா ? இந்த 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து.. !

1

கடந்த மூன்று நாட்களாக திருமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.வழக்கமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் தற்போதும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை தேவாஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமலை தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை திருமலை சேவகர்கள் வழங்கி வருகின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 18 பெட்டிகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். காலை 7 மணிக்கு இலவச தரிசன வரிசையில் நுழையும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 10 மணி நேரம் ஆகும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

300 ரூபாய்க்கு சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் திருப்பதியில் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வரும் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 5 மணி நேர இடைவெளியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் வரும் 9 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like