நவம்பர் மாதம் திருப்பதிக்கு போறீங்களா ?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
உலகின் பணக்கார கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு, பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வரை அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரையிலான அனைத்து தரிசன மற்றும் சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான தரிசன மற்றும் சேவை முன்பதிவுகள் இந்த மாதம் 19-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நவம்பர் மாதத்திற்கான தரிசன மற்றும் சேவை டிக்கெட்கள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.