1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி போறீங்களா ? ஆந்திர போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு..!

11

ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த பொன்னான வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள், கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவான தரிசன டிக்கெட்டைப் பெறலாம்.

இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள்.

எனவே, திருப்பதி செல்லும் பயணிகள் முதலில் ஆர்டிசி பஸ்களில் விரைவு தரிசன டிக்கெட் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது.  திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இது மிகவும் நல்ல வசதி.

Trending News

Latest News

You May Like