1. Home
  2. தமிழ்நாடு

கோடையில் ஊட்டிக்கு போறீங்களா ? அப்போ இ-பாஸ் கட்டாயம் தேவை..!

1

தமிழ்நாட்டின் பல சுற்றுலா பகுதிகளும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள்.

கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு ஏராளமான பயணிகள் தொடர்ந்து வந்து செல்வதால் ஊட்டி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊட்டிக்கு வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

அதன்படி ஊட்டிக்கு செல்பவர்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியிலிருந்து கீழே இறங்குபவர்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஒரு வழிப்பாதை உத்தரவு மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி செல்ல விரும்புபவர்கள் சரியான பாதையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ - பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்; உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும்; சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கில் இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தல்.

மக்கள் அதிகம் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like