நாளை மருதமலைக்கு போறீங்களா..? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்..!

கோவை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலுக்கு ஜூன் 9ம் தேதி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.