1. Home
  2. தமிழ்நாடு

கிரிவலம் போறீங்களா ? கிரிவலம் செல்ல நல்ல நேரம் அறிவிப்பு..!

1

கிரிவலம் என்று சொன்ன உடனேயே நினைவிற்கு வரும் புண்ணிய தலம் திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சிவனையே வலம் வருவதற்கு சமம் என்பதாலேயே பக்தர்கள் காலில் செருப்பு கூட அணிவது கிடையாது. அதே போல் மலை மீது ஏறி செல்வதற்கும் தடை உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று, மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்ற பர்வத குலத்தவர்கள் மட்டும் சிவனிடம் மன்னிப்பும், அனுமதியும் கேட்டு விட்டு மலை உச்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மலை மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலையில் வருடத்தின் அனைத்து நாட்களும், அனைத்து நேரமும் பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டு தான் உள்ளனர். இருந்தாலும் பெளர்ணமி தினம் சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த, மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பெளர்ணமி நாளிலேயே விரதம் இருந்து கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரிவலம் சென்றால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். சிவ பெருமானின் அருளால் அனைத்து விதமான செல்வ நலன்களும் கிடைக்கும். வேண்டுதல்கள் நிறைவேறும். சித்தர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஜூன் மாத பெளர்ணமி வைகாசி பெளர்ணமியாகவும், ஜேஷ்ட பெளர்ணமியாகவும் அமைந்துள்ளது. ஜூன் 10ம் தேதி செவ்வாய் கிழமை பெளர்ணமி தினம் அமைந்துள்ளது. இந்த மாதம் இரண்டு நாட்கள் பெளர்ணமி திதி உள்ளது. ஜூன் 10ம் தேதி பகல் 12.27 மணிக்கு துவங்கி, ஜூன் 11ம் தேதி பகல் 01.53 வரை பெளர்ணமி திதி உள்ளது. இருந்தாலும் கிரிவலம் செல்ல ஏற்ற நேரமாக ஜூன் 10ம் தேதி காலை 11.35 மணி முதல் ஜூலை 11ம் தேதி பகல் 01.30 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த நேரத்திற்குள்ளார் தங்களின் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஜூன் மாத பெளர்ணமி செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் விசேஷமானதாகும். பொதுவாகவே திருவண்ணாமலையில் செவ்வாய்கிழமையில் கிரிவலம் சென்றால் கடன், வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வேலையில் ஏற்படும் பிரச்சனைகள், பொறாமை, அவமானம், பகை ஆகியவை நீங்கி உத்தியோகத்தில் உயர்வு, விரும்பிய இடமாற்றம், துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Trending News

Latest News

You May Like