1. Home
  2. தமிழ்நாடு

கோவில்களில் பரிகாரம் செய்ய போறீங்களா? இதைப் படியுங்க முதல்ல.

1

பரிகார பூஜை செய்வதற்கு பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆச்சார்ய பெருமக்கள் சொல்கிறார்கள் தெரியுமா? ஆலயத்துக்குள் நுழையும் போது கை- கால்களைச் சுத்தம் செய்து உள்ளே நுழைய வேண்டும். சிலர் தலையில் நீர் தெளித்தப்படி செல்வார்கள்.ஆனால் அப்படி செல்ல வேண்டாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உள்ளே நுழையும் போது பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி முதல் வணக்கத்தை சமர்பித்து ஒரு சிதறு தேங்காயைப் போடுங்கள். பரிகார பூஜை செய்வதற்கு முன்பு பித்ருக்கள் வழிபாடு, குலதெய்வம், முழு முதற் கடவுள் பிள்ளையார், பிறகு பரிகார கடவுள் வழிபாடு என்பதே சரியாக இருக்கும்.
பரிகாரத் தலங்களுக்குச் செல்லும் போது பெரும்பாலும் அதிகாலை பூஜை செய்ய வேண்டும் என்பதால் முதல்நாள் இரவே சென்றுவிடுவது நல்லது. ஆலயங்களுக்கு அருகில் உள்ள சத்திரங்கள் அல்லது விடுதியில் தங்குவது நல்லது.


எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் குடும்பத்துடன் செல்வதே பலனளிக்கும். பரிகாரங்கள் செய்யும் வீட்டுப்பெண்கள் மாதவிடாய் நாள்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் முடிந்தாலும் 7 நாட்கள் கழித்தே பரிகாரம் செய்வது உத்தமம். குடும்பத்திலும் பரிகாரம் செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே அசைவ உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பரிகாரம் முடிந்த பிறகும் 2 நாட்கள் வரை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. அதேப்போன்று ஆண்கள் மது குடிக்ககூடாது. கணவன், மனைவி இருவரும் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடக்கூடாது.


பரிகாரம் செய்ய செல்வதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு செய்வது பலனளிக்கும். பொருளாதார நெருக்கடி எப்போதும் எல்லோருக்கும் உண்டு. ஆனால் பரிகார பூஜைகளுக்கு செல்லும்போது பிறரிடம் கடன் வாங்கி செல்ல வேண் டாம். பரிகாரம் செய்ய செல்லும்போது பரிகாரத்துக்குரிய தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். இதர கோயில்கள் அருகிலேயே இருந்தாலும் அவை புண்ணியம் தரக்கூடிய பிரதானக் கோயிலாக இருந்தாலும் அங்கு செல்ல கூடாது. அதனால் பரிகாரங்கள் பலன் தாமதமாக கிடைக்கவும் வாய்ப்புண்டு.
குடும்பத்தின் நலனுக்காக பரிகாரம் செய்தாலும் யாருக்காக பரிகாரம் செய்கிறோமோ அவரே முன்நின்று செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். பரிகாரங்கள் செய்ய விரும்புபவர்கள் பூஜை செய்வதற்கு முன்பு துக்க நிகழ்வுகளிலும், துக்க வீட்டுக்கும் செல்வது நல்லது அல்ல, உறவுகளுக்குள் அல்லது நெருங்கிய உறவுகள் தவறினால் பரிகாரங்கள் செய்வதைத் தள்ளி போடலாம்.


பரிகாரங்களோடு அகல் விளக்குகளை ஏற்றிவையுங்கள். விளக்குகளை ஏற்றும் போது பிற விளக்குகளில் இருந்து ஏற்றிவைக்க வேண்டாம். எலுமிச்சம் பழத்தை ஆலயங்களில் உள்ள சூலத்தில் ஏற்றுங்கள். நைவேத்யத்துக்கு பழங்கள். இனிப்புகள், மலர்களை வாங்கி செல்லுங்கள். பரிகாரத்தின் போது செய்யப்படும் கோ பூஜை பரிகார பலனை அதிகரிக்கும். இறுதியாக ஒன்று பரிகாரத்தை அவசர அவசரமாக செய்யாமல் நிதானமாக செய்து மனதில் இறை வனை நிறுத்தி வழிபடுங்கள்.

Trending News

Latest News

You May Like