1. Home
  2. தமிழ்நாடு

எச்எஸ்ஆர்பி பதிவெண் பலகைக்கு மாற்றப் போறீங்களா ? அப்போ இதை முதலில் படிங்க..!

1

இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் எச்எஸ்ஆர்பி பதிவெண் (HSRP Plates) பலகைகளுக்கு மாறுதவற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பல்வேறு மாநில அரசுகள் கட்டாயமாக்கி உள்ளன.

தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்களில் இந்த உத்தரவு கட்டாயப்படுத்தப்படவில்லை. எனினும் வாகன ஓட்டிகள் பலரும் விருப்பப்பட்டு தங்கள் வாகனங்களுக்கு பதிவெண் பலகைகளை மாற்றி வருகின்றனா். ஆனால் கர்நாடகத்தில் எச்எஸ்ஆர்பி பதிவெண் பலகை உத்தரவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக வாகன ஓட்டிகள் பலரும் புதிய பதிவெண்ணுக்கு மாறிவிட்டனா். எனினும் பல லட்சம் பேர் இன்னும் மாறவில்லை.

அவர்களை புதிய பதிவெண்ணுக்கு மாறும்படி கர்நாடக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. எச்எஸ்ஆர்பி பதிவெண்ணுக்கு மாறுவதற்கு கர்நாடக அரசு பலமுறை காலக்கெடு வழங்கிவிட்டது. எனினும் வாகன ஓட்டிகள் பலரும் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல் உள்ளனா்.

இந்த நிலையில் நவம்பர் 30 ஆம் தேதியுடன் இதற்கான கெடு முடிந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் வசதிக்காக எச்எஸ்ஆர்பி பதிவெண்ணுக்கு மாறுவதற்கு கர்நாடக அரசு கால கெடுவை நீட்டித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புதிய பதிவெண் பலகைகளை பொருத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

HSRP நம்பர் பிளேட்டை எவ்வாறு பெறுவது?

https://transport.karnataka.gov.in அல்லது www.siam.in போர்ட்டலில் உள்நுழையவும். இங்கே கிளிக் செய்யவும் HSRP ஐ பதிவு செய்யவும்.
உங்கள் வாகன தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் வாகன விவரங்களை அங்கு உள்ளிடவும்.
உங்கள் அருகிலுள்ள அல்லது உங்கள் டீலர் ஷோரூமை தேர்ந்தெடுக்கவும்
அங்கு குறிப்பிடப்பட்டுள்ள HSRP நம்பர் பிளேட் தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும்
மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
HSRP நம்பர் பிளேட் பொறுத்துவதற்கு வசதியான தேதியைப் பெறுங்கள்.

இந்தியாவில் குற்றச்சம்பவங்களுக்கு பின்னால் திருட்டு வாகனங்கள் தான் உள்ளன. திருட்டு வாகனங்களில் வந்து செயின் பறிப்பது, கொலை, கொள்ளை போன்றவற்றில் குற்றவாளிகள் ஈடுபட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு உயர் பதிவெண் பலகைகளை பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை என்பது வாகனங்களில் ஸ்குரு மூலம் பொருத்தப்படாது. எனவே பதிவெண் பலகைகளை மாற்ற முடியாது. மேலும் புதிய பலகைகளில் உள்ள எழுத்துக்கள் சுலபத்தில் அழியாத வகையில் அச்சிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like