1. Home
  2. தமிழ்நாடு

எலக்ட்ரிக் பைக் வாங்க போறீங்களா ? 24,000 வரை தள்ளுபடி பெற வாய்ப்பு..!

1

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்து இருக்கிறது. மேலும் முன்னணி நிறுவனங்கள் பலவும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கி இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது காலநிலை மாற்றம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு. இதனால் ஓலா, டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டுகின்றன.   

மேலும் 4 சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்தியும் இந்தியாவில் தற்போது சூடு பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் பலரும் வாகனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அதிக அளவிலான வாகன விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு பெரிய சந்தேகம் எழுந்து இருக்கிறது. பெட்ரோல் வாகனம் வாங்கலாமா அல்லது எலக்ட்ரிக் வாகனம் வாங்கலாமா என்று. 

பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. அதே நேரம் மைலேஜ் என்று எடுத்துக் கொண்டால் பெட்ரோல் வாகனங்களுக்கு 103 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 45 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும்.   இதனால் 10 கிலோ மீட்டருக்கு 21 ரூபாய் வரை செலவாகிறது. அதே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எடுத்துக் கொண்டால் ஒரு முறை சார்ஜர் செய்தால் 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். 10 கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கியதற்கு பிறகான செலவுகள் மிக குறைவு. ஆனால் பெட்ரோல் வண்டிகளை பொறுத்த வரை சர்வீஸ் சார்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆவதை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்.  

இந்நிலையில் Ather அதன் மின்சார 2 சக்கர வாகனங்களின் வரம்பில் ரூ. 24,000 வரை தள்ளுபடி வழங்குகிறது, மேலும் இதில் ரூ. 5,000 வரையிலான ரொக்கப் பலன்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ரூ. 1,500 வரையிலான கார்ப்பரேட் நன்மைகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் EMIகளில் குறைந்த வட்டி விகிதங்களில் ரூ. 12,000 வரை ரொக்க சேமிப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் முழுவதும் கிரெடிட் கார்டு EMIகளில் ரூ. 10,000 வரை கேஷ்பேக் பெறலாம். 

மேலும் ரூ.7,000 மதிப்புள்ள பேட்டரி பேக்கிற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் கூடுதலாக அளிக்கப்படவுள்ளது. இது இயல்பான 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ என்ற உத்திரவாதத்தை விட அதிகமாக 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ வரை உத்தரவாதத்தை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

கூடுதலாக ஏதர் 450X மற்றும் 450S ஆகிய இரு மாடல்களும் கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் பெறுகின்றன (Extended Warranty). அதே போல 450X பைக், இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைப் பெறுகிறது அது முரையே 2.9 kWh மற்றும் 3.7kWh ஆகும். மேலும் இந்த அனைத்து சலுகைகளும் டிசம்பர் 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

Trending News

Latest News

You May Like