1. Home
  2. தமிழ்நாடு

கோழி கொட்டகை அமைக்க போறீங்களா ? 100 % மானியம் வழங்கும் தமிழக அரசு..!

1

தமிழக அரசு கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகிறது. அதன்படி இலவசமா மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டு கோழி குஞ்சு வழங்குதல் போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்கான சிறிய அளவிலான பண்ணைகளை அமைத்து கொடுக்கிறது அரசு. அதுவும் மானியத்துடன் கோழி கொட்டகை அமைத்து கொடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் எதற்காக அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், ஒருங்கிணைந்த விவசாயம் பண்றவங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.கோழி கொட்டகை அமைத்து கொடுக்கப்படும் இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம் (100 நாள் வேலை திட்டம்) கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த கோழி பண்ணை அமைக்கறதுக்கு உங்களுக்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்படுகிறது எனப்பார்த்தால், உங்களுக்கு அதிகபட்சமா 10 லட்ச ரூபா வரைக்கும் உங்களுக்கு மானியம் கொடுக்கப்படும். இதில் 50 சதவீதம் மானியம் பண்ணை அமைப்பதற்கும் மீதி 50 சதவீதம் மானியம் கட்டிடம் கட்டறதுக்கும் அளிக்கப்படுகிறது. இதில் ஷெட் போடுறதுக்கு ஒரு காண்ட்ராக்ட் மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கான்ட்ராக்ட் என தனித்தனியா ரெண்டு காண்ட்ராக்ட் போடப்படும்.

இலவசமா கோழிக் கொட்டகை அமைக்க எங்கே அப்ளை செய்ய வேண்டும் என்றால், உங்கள் கிராமத்துக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு சென்று அப்ளை செய்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலத்திலும் இருக்கும் டிஆர்டிஓ டிபார்ட்மெண்ட்டுக்கு நேரில் சென்று அப்ரோச் பண்ணலாம். 

இலவசமா கோழிக் கொட்டகை அமைக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் எனப்பார்த்தால், உங்களிடம் மினிமம் ஒரு 50 கோழிகளாவது இருக்க வேண்டும். அதாவது கோழிக் கொட்டகை அமைக்க அப்ளை செய்வதற்கு முன்பாகவே குறைஞ்சது ஒரு ஆறு மாசத்தில் இருந்து 50 கோழிகளை தொடர்ந்து வளர்த்துட்டு இருக்க வேண்டும். கோழிக் கொட்டகை அமைக்க உங்களிடம் சொந்த இடம் இருக்க வேண்டும். கோழிக் கொட்டகை அமைக்கும் இடம் மனித குடியிருப்புகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் மற்றும் மின் இணைப்பு இருக்க வேண்டும். மேலும் அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

இலவசமா கோழிக் கொட்டகை அமைக்க விரும்புவோர் உங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று, அங்கே வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, அதை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்கவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்களை அட்டாச் செய்து கொடுக்க வேண்டும்.

இலவச கோழிக் கொட்டகை அமைக்கும் திட்டத்தின் நோக்கம் மக்களுக்கு தேவையான வருமானம் ஈட்ட சுயதொழில் அமைத்துக் கொடுப்பது. குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியது கோழி வளர்ப்புத் தொழிலாகும். எனவே தான் அரசு கிராமப்புற விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like