மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க போறீங்களா ? புதியவர்கள் விண்ணப்பிக்கும் முன் இந்த தவறை செய்துவிடாதீர்கள்..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தகுதிகள் இருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தன்னார்வலர்கள் பயனாகளின் வீடுகளுக்கே சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்தும் வழிக்காட்ட உள்ளனர்.இந்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதேநேரத்தில் தகுதியில்லாதவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏனென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் இருக்கக்கூடாது.எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர், மேயர், ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தில்சேர தகுதியற்றவர்கள்
2.5 லட்சத்துக்கும் மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள், தொழில்செய்து தொழில் வரி கட்டுப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள். இந்த திட்டத்தில் பயனாளியாக இருப்பவர்கள் குடும்பத்தில் இன்னொருவர் அதே ரேஷன் கார்டு வைத்து விண்ணப்பிக்க கூடாது.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. இவையெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அடிப்படை விதிமுறைகள். இந்த தகுதிகளுக்கு உட்படாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. அவர்கள் விண்ணப்பித்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அதேபோல் தகுதியான நபர்களாக இருப்பவர்கள் சரியான மொபைல் எண், வங்கி கணக்கு எண் கொடுக்கவும். இந்த சிறிய தவறு கூட உங்களுக்கு பணம் வருவதில் சிக்கலை உண்டாக்கும். மீண்டும் ஆவணங்களை கொடுக்க அலைய வேண்டியிருக்கும். எனவே, ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும்.