1. Home
  2. தமிழ்நாடு

சேப்பாக்கம் வழியா செல்பவரா நீங்கள் ? இந்த 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..!

1

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் காண்கின்றன.ஐபிஎல் போட்டியை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனை கருத்தில் கொண்டு சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில்  சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள, ஏப்ரல் 08, 23, 28 மற்றும் மே 1, 12, 24, 26 ஆகிய 7 நாட்களுக்கு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது .  போட்டி நடைபெறும் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 11 வரை மட்டும் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 12ஆம் தேதி நண்பகல் 01.00 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like