விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? சிறப்பு ஸ்பெஷல் பஸ் ரெடி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.
வரும் ஏப்ரல் 9 அன்று (புதன் கிழமை) சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், ஏப்ரல் 11 அன்று (வெள்ளிக் கிழமை) 25 பேருந்துகளும் மற்றும் ஏப்ரல் 12 (சனிக்கிழமை) 380 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
வரும் ஏப்ரல் 9 அன்று (புதன் கிழமை) சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 50 பேருந்துகளும், ஏப்ரல் 11 (வெள்ளிக் கிழமை) 100 பேருந்துகளும், ஏப்ரல் 12 (சனிக்கிழமை) 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளது
பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 9 மாதாவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும், ஏப்ரல் 11, 12 அன்று 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 14 அன்று பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். புதன்கிழமை 10,065 பயணிகளும், வெள்ளிக்கிழமை 14,898 பயணிகளும், சனிக்கிழமை 8,278 பயணிகளும் மற்றும் திங்கள் 12,399 பயணிகளும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.