1. Home
  2. தமிழ்நாடு

வெளிநாடு செல்பவரா நீங்கள் ? 300 ரூபாய் செலுத்தி தடுப்பூசிகள் போட்டு கொள்ளுங்கள் - ஒன்றிய சுகாதாரத்துறை..!

1

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின்னரே மேற்கண்ட நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து இந்தியா வரவும் அனுமதிக்கப்படுவர். விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என கண்காணிக்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vaccine

இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிக்கு 3 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

central-govt

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் தங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் காலை 11 மணி முதல் 9 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும். இந்த 3 மையங்களிலும், அசல் கடவுச் சீட்டு மற்றும் சுய விவர குறிப்புடன் பதிவு செய்து 300 ரூபாய் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like