ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளரா நீங்கள் ?இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!
மூன்றாம் தரப்பு பேமண்ட் ஆப்களை பயன்படுத்தி வாடகை பரிவர்த்தனைகளை (Rental Transaction) செய்யும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அதாவது பேடிஎம் (PayTM), கிரெட் (CRED), மொபிகுவிக் (MobiKwik) மற்றும் செக் (Cheq) போன்ற மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்ஸ் மூலம் செய்யப்படும் அனைத்து வாடகை பரிவர்த்தனைகளுக்கும், பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுபோல பயன்பாட்டு பரிவர்த்தனை (Utility transactions) கட்டணம், எரிபொருள் பரிவர்த்தனை (Fuel transactions) கட்டணம், கல்வி பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் (Charge on educational transactions), சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான (international transactions) கட்டணம் போன்றவைகளிலும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.
50,000 ரூபாய் வரையிலான பில் கட்டணங்களுக்கு (Utility Bills) எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1% கட்டணம் வசூலிகப்படும். எனினும், இன்ஷூரன்ஸ் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு 15,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தினால், 1% கட்டணம் வசூலிக்கப்படும். எனினும், 15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாக கல்வித் துறை சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், 1% கட்டணம் வசூலிக்கப்படும். சர்வதேச கல்விக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்கே கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால், அதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படாது.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்தினால், நிலுவைத் தொகையின் அளவுக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அதே நேரத்தில் ரூ15000க்கு மேல் எரிபொருள் கட்டணம் ஒரு சதவீதம் செலுத்த வேண்டும். HDFC Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இப்போது 1.5 சதவீத நாணயங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)