1. Home
  2. தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுப்பவரா நீங்கள்?

Q

அரசுப் பேருந்துகளில் ஜி பே, டெபிட் கார்டு, போன் பே மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணத்தில் டிக்கெட் பெரும் போது நடத்துநர் மற்றும் பயணிகளிடையே சில்லறை பிரச்சனைகளை தவிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.இந்த திட்டம் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் UPIபுதிய கையடக்க கருவிகளை வாங்கியது.இந்த திட்டம் முதலில் சென்னையில் உள்ள மாநகரப்பேருந்துகளில் அமல்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்துகளில் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பேருந்து பயணத்தின் போது தொலைதொடர்பு சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சில நேரங்களில் UPI பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உள்ளது.அதுமட்டுமின்றி ஒரு சில நேரங்களில் பயணத்தின் போது UPI பரிவர்த்தனை செய்த பிறகு பணம் செலுத்திய பிறகும் டிக்கெட் பெற முடியாததால் அவ்வப்போது நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது வந்தது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வைகையில் தற்போது தமிழக போக்குவரத்து துறைபுதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதாவது: அரசு பேருந்துகளில் யுபிஐ பண பரிவர்த்தனை மூலமாக பாடம் செலுத்தும் பொழுது தோல்வி அடைந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் பயணிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வகையில் எஸ்பிஐயுடன் இணைந்து போக்குவரத்து துறை புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து கழக மூத்த அதிகாரிகள் கூறுகையில் : UPI பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்தும் முறையின் போது பயணிகளுக்கு பணம் திருப்ப கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் வகையில், ‘யுபிஐ ஆட்டோ ரீஃபண்ட்’ என்னும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை பாரத ஸ்டேட் வங்கி துணையுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் தொகை திரும்பி செலுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கும் , நடத்துநர்களுக்கும் ஏற்படும் பிரச்சணையை தவிர்க்கும் வகையில் அச்சமின்றி UPI பரிவர்த்தனை முறையில் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் உதவி எண்களும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like