1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : இனி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..!

Q

டில்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடை பெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி முதலமைச்சர் அதிஷி தனது கால் காஜி சட்டப் பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

 

முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் அமைச்சர் முகேஷ் குமார் அஹ்லாவத் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியிலும், புராரி தொகுதியில் சஞ்சிவ ஜாவும், பாத்லி தொகுதியில் அஜேஷ் (யாதவ்) மற்றும் ராஜித்தர் நகர்
தொகுதியில் துர்கேஷ் பதக் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில், பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், “60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்கான செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது என அதிரடியாக அறிவித்துள்ளார்  
“இன்று, மூத்த குடிமக்களுக்கான சஞ்சீவனி யோஜனாவை நான் அறிவிக்கிறேன். இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும்” 
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று முன்னாள் முதல்வர் மேலும் கூறினார். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 


 

Trending News

Latest News

You May Like