1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள் பெங்களூரில் வசிப்பவரா? வாடகை வீட்டை மாற்றினாலும் இலவச மின்சாரம் பெறலாம்.. எப்படி தெரியுமா ?

1

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.அதில் ”க்ருஹ ஜோதி” என்ற பெயரில் 200 யூனிட் வரை இலவச மின்சார பயன்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது மாநிலம் தழுவிய அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல லட்சம் பேர் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தாமல் அரசின் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கு வீட்டில் வசிப்பவர்கள் மின் மீட்டர் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்களை பொறுத்தவரை மின் மீட்டர் கணக்கு உரிமையாளரின் பெயரில் இருக்கும். அப்படி இருந்தாலும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து இலவச மின்சார திட்டத்தின் பயனை பெறலாம். இந்நிலையில் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் பழைய மின் மீட்டர் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும். இதை நீக்கினால் தான் புதிய வீட்டின் மின் மீட்டருடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆனால் நீக்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதற்காக மின்வாரிய அலுவலகங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடகா அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எப்படி சேவா சிந்து இணையதளத்திற்கு சென்று இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தார்களோ? அதே இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை நீக்கி கொள்ளலாம். இதை அமல்படுத்துமாறு அனைத்து எஸ்காம்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like