நீங்க பேடிஎம் வாடிக்கையாளரா ? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
பிப்ரவரி 29 முதல் பேடிஎம்-இல் அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக RBI தரப்பில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 2024 இல் RBI புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்குவதை உடனடியாக நிறுத்துமாறு PPBL க்கு உத்தரவிட்டது.
சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபைலிட்டி கார்டுகள் போன்ற கணக்குகளில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படும் என்றும் மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.
இந்நிலையில் பேடிஎம் நிறுவனர் செய்துள்ள ட்விட் அதன் பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிப்ரவரி 29-க்கு பிறகும் உங்களுக்கு பிடித்தமான பேடிஎம் சேவைகள் கிடைக்கும், பேடிஎம் தொடர்ந்து இயங்கும் எனவும் பேடிஎம் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான விஜய் ஷேகர் சர்மா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், "அனைத்து பேடிஎம் பயனர்களுக்கும், உங்கள் அபிமான பணம் செலுத்தும் ஆப் வேலை செய்கிறது. பிப்.29-க்கு பின்னரும் தொடர்ந்து வேலை செய்யும். உங்களுடைய இடைவிடாத ஆதரவுக்காக ஒவ்வொரு பேடிஎம் குழுவினருடனும் உங்களை நான் வணங்குகிறேன். ஒவ்வொரு சிக்கலுக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. முழுமையான இணக்கத்துடன் தேசத்துக்காக சேவை புரிய நாங்கள் கடமைபட்டுள்ளோம்.பணம் செலுத்துவதில் புதுமை மற்றும் நிதி சேவைகளில் இந்தியா தொடர்ந்து உலகளாவிய பாராட்டுக்களைப் பெறும். அதில் ‘பேடிஎம்கரோ’ மிகப் பெரிய வெற்றியாளராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
"Your favourite #Paytm app is working & will keep working beyond 29th Feb, 2024 as well," tweets our Founder and CEO @vijayshekhar. Read here! #PaytmKaro pic.twitter.com/CDcTyVuQGg
— Paytm (@Paytm) February 2, 2024
"Your favourite #Paytm app is working & will keep working beyond 29th Feb, 2024 as well," tweets our Founder and CEO @vijayshekhar. Read here! #PaytmKaro pic.twitter.com/CDcTyVuQGg
— Paytm (@Paytm) February 2, 2024