நீங்கள் ஸ்குவிட் கேம் ரசிகரா..? அப்போ உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இதோ!

தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்' 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர் விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டுதான் ஸ்குட் கேமின் திரைக்கதை. இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 45.6 பில்லியன் பரிசுத்தொகையை வெல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைபவர்கள் உயிரிழந்து வெளியேற முடியாது.
மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் 2024- டிசம்பர் 26-ல் வெளியாகி ரசிகளை குஷியில் ஆழ்த்தியது. இது வெளியான மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் அதிக நாடுகளில் முதலிடம் பிடித்த முதல் வெப் சீரிஸ் என்ற பெருமை ஸ்குவிட் கேம்-மிடம் உள்ளது.
ஸ்குவிட் கேம்,. Stranger Things மற்றும் Wednesday, ஆகிய வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதனால் சப்ஸ்கிரைபர்கள் கிடைப்பது உறுதி என்பது அந்நிறுவனத்தின் நோக்கம். ஸ்குவிட் கேம் மூலம் நெட்ஃப்ளிக்ஸிற்கு 19 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. உலக அளவில் நெட்ப்ளிக்ஸிற்கு 302 மில்லியன் பயனர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தொடரின் சீசன் 3 வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சீசன் 3 கதை எப்படி இருக்கும் என்பதை பற்றி யூகிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.
You’re Not Ready For What’s #NextOnNetflix pic.twitter.com/CUtIRgGn9X
— Netflix India (@NetflixIndia) January 30, 2025