பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ? இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு 1 மாதத்தில் மூடப்படும்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உங்களுடைய வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால் நீங்கள் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும்.
வங்கிக் கணக்கில் நிலுவைத் தொகை இல்லை என்றால், அத்தகைய கணக்குகள் ஒரு மாதத்திற்குப் பிறகு மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற கணக்குகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி காரணம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமன்றி, வங்கி கணக்கில் நிலுவைத்தொகை (Minimum Balance) இல்லை என்றாலும் அந்த கணக்குகள் 1 மாதத்திற்குள்ளாக மூடப்படும் என அந்த வங்கி தங்களின் வாடிக்கையாளர்களை எச்சரித்திருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளுக்கான கணக்கீடு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், டீமேட் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், ஆக்டிவ் லாக்கருடன் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்சன், 25 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகள், சிறு கணக்குகள், சுகன்யா சம்ரிதி கணக்குகள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற கணக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குகளை தவிர, வருமான வரித்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு துறைகளால் மூடப்பட்ட கணக்குகள் இதன் கீழ் வராது என வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வகையான கணக்கை கொண்ட வாடிக்கையாளர்கள், UPI ஐடி, QR குறியீடு ஆகிவற்றின் மூலமாக பணம் செலுத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.