உங்களுக்கு 60 வயது ஆகிறதா ? தமிழக அரசின் மகிழ்ச்சியான செய்தி..!

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு திட்டம் கொண்டுவந்துள்ளது... இதற்கான உதவி எண்- 14567 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் 14567 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள். அதில் நமது பிள்ளைகள் நம்மை சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்ற குறையா? மருத்துவ ரீதியான குறையா? அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான தடை ஏதேனும் உள்ளதா? வங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏதாவது குறை இருப்பின் கூறுங்கள் என்று கேட்பார்கள்.
அதன்படி நாம் மேற்கூறிய குறைகள் ஏதேனும் இருந்து அதனை தெரிவித்தால் அந்த குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும், பாதுகாப்பாகவும், செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாவிட்டால் மேற்கண்ட 14567 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறினால் நமக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்கு பாதுகாப்பாக அனைத்து மூத்த குடிமக்களுக்கும் உதவும் வகையில் ஒரு உதவியாளர் இருப்பது போல் தமிழக அரசு இந்த திட்டத்தை வகுத்துள்ளது.
ஆகவே இந்த அரிய சேவையை அனைத்து மூத்த குடிமக்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.இந்த சேவை மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.