1. Home
  2. தமிழ்நாடு

TNPSC தேர்வுகள் நடைபெறுமா ? நடைபெறாதா ? TNPSC விளக்கம் !!

TNPSC தேர்வுகள் நடைபெறுமா ? நடைபெறாதா ? TNPSC விளக்கம் !!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) சார்பில் ஆண்டு தோறும் தேர்வு நடத்தி , காலியாக இருக்கும் அரசு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் , இந்த ஆண்டு கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

TNPSC தேர்வுகள் நடைபெறுமா ? நடைபெறாதா ? TNPSC விளக்கம் !!

ஆனால், குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தவர்களுக்கு, இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படுமா…? என்பது சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போதைக்கு குரூப் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தியில் , தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வுக்கு முன்பாக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். சரியான சூழல் திரும்பிய பிறகு தேர்வு நிச்சயம் நடத்தப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் எனக் கூறினார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like