மாணவர்களே ரெடியா..! தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த அக்டோபா் 15-ம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 880 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதுதவிர அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் முதல்வர் திறனாய்வுத் தோ்வு நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ப்ளஸ் 1 மாணவா்களில் ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வு அக்டோபா் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.