1. Home
  2. தமிழ்நாடு

உங்களை ரேஷன் கடை ஊழியர்கள் பிற பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துகிறார்களா?

1

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தமிழ்நாட்டில் பேருந்துகள் போக முடியாத மலை கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேர் உணவு பொருட்கள் பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டை வைத்து எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இந்நிலையில், பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளில் கை விரல் ரேகையை பதிவிட்டு பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால், சொந்த மாநிலங்களை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்வோர் பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் பொருட்களை வாங்க உங்கள் கைரேகை பதிவு மட்டும் போதும், நீங்கள் நீலகிரியில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் சரி, பொருட்களை வாங்கி கொள்ள முடியும். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், ரேஷன் கடைகளில் ஏற்கனவே கைரேகை பதிவு செய்து வைத்திருந்தால், தமிழ்நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எளிதாக பெறலாம்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு பொருள் வாங்க போனால், பிற பொருட்களை வாங்கினால் தான் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் தருவோம் என்று சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.. 100 ரூபாய் அல்லது குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது ஒரு பொருள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது நடக்கிறது.

ஆனால் உங்களை ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினால் வாங்காதீர்கள்.. மாறாக கடை ஊழியர் குறித்து தாராளமாக புகார் அளிக்கலாம். ரேஷன் கடை எண், ரேஷன் கடை ஊழியர் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

Trending News

Latest News

You May Like