ரசிகர்களே ரெடியா ? இன்று வெளியாகிறது தலைவர் 171 டீஸர்..!
பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171-ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இயக்கப்பட உள்ள திரைப்படம் மாபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் தலைப்பு தொடர்பான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில், பாலிவுட் பிரபலமான நடிகர் ரன்வீர் சிங், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O 🔥#Thalaivar171 @rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @sunpictures pic.twitter.com/v1LIZzpnBX
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 21, 2024