+2 மாணவர்களே ரெடியா ? வரும் திங்கள்கிழமை வெளியாகிறது துணைத்தேர்வு முடிவுகள்..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இதில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
இந்த சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19-ந் தேதி துணைத்தேர்வு நடந்தது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேரும் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் துணைதேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 24ஆம் தேதி பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. dge.tn.gov.in என்று இணையதளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.