தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு போறாங்களா?வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகளில் நடப்பது குறித்து பல்வேறு கட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்வின் இறுதியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய சுமார் 75 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி மையத்தைப் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வில் தேர்வான 75 மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியல் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ரஷ்ய விண்வெளி ஏவுதளம் செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும், இதில் முதற்கட்டமாக 50 மாணவர்கள் வரும் 9 ஆம் தேதி ரஷ்யா பயணிக்க உள்ளதாகவும் மற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு மே மாதம் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.