1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா ? +2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்..! எத்தனை மணிக்கு தெரியுமா ?

1

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்வு முடிந்து சில நாட்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை பெற்றுக்கொண்டனர். இதில் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை மே 28ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க மே 29ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை அதற்கான கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like