1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா ? பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கியத் தகவல்..!

1

மே மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அக்னி நட்சத்திரமும் தொடங்கியதால் அனல் காற்று வீசியது. இதேநிலை தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டை போல பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும். எப்படியும் ஜூன் மூன்றாவது வாரம் ஆகிவிடும் என்று தகவல்கள் வெளியாகின. அதிலும் நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் ஜூன் இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறி வந்தனர். இருப்பினும் அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இப்படியான சூழலில் ஜூன் தொடக்கமும் இதமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பில்லை என்கின்றனர். இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதாவது, மே மாத இறுதியில் நிலவும் சூழலை பொறுத்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் ஜூன் 5 அல்லது 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்கின்றனர். ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஈடுபட வாய்ப்புள்ளது. 

Trending News

Latest News

You May Like