1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா..? தவெக சார்பில் மாமல்லபுரத்தில் கல்வி விருது வழங்கும் விழா..!

Q

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி முதல் கட்டமாக மே 30ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்றாம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அரியலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டுகிறார் தவெக கட்சியின் தலைவர் விஜய்.

கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அழைத்து கல்வி விருது விழா நடித்திவரும் விஜய், அதில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி அனைவரையும் பாராட்டி வருகிறார். அதேபோல இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். 


 


 


 

Trending News

Latest News

You May Like