1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே ரெடியா ? வரும் திங்கட்கிழமை முதல் +1 மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!

1

பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களைக் கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like