1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களே ரெடியா..? விரைவில் தவெக கட்சி சார்பில் பரிசுகள் வழங்கும் விழா..!

Q

2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய்.இதற்காக விழுப்புரத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை பிரமண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் கோவை மற்றும் மதுரை மாவட்டத்தில் தமிழகம் வெற்றிகழகம் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது.இதற்கிடையே , தமிழ்நாட்டில் படித்து வரும், 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.

இதற்காக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் விஜய் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு தவெக கட்சி சார்பில் 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஜீன் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like