1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களே ரெடியா ? நாளை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

Q

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அதன் பின் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதன் காரணமாக தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி துரிதமாக நடந்தது .

சமீபத்தில் இப்பணிகள் முடிவடைந்த நிலையில், மதிப்பெண்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிய இருப்பதால், அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 06) காலை 09.30 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவுச் செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். தமிழகத்தில் மார்ச் 01- ஆம் தேதி முதல் மார்ச் 22- ஆம் தேதி வரை நடந்த 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

Trending News

Latest News

You May Like