கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா? - தமிழக அரசு விளக்கம்..!

கடந்த சில தினங்களாக தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில் "தஞ்சாவூர் மக்களே ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் தஞ்சாவூர் மக்கள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், "இது தவறான தகவலாகும். ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.